நிதி அமைச்சகம்
நிதித் துறைத் திட்டங்களின் பலன்கள் முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய 3 மாத இயக்கம் - உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகள் நிலையில் நடத்துகிறது நிதி சேவைகள் துறை
Posted On:
01 JUL 2025 6:38PM by PIB Chennai
நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நிலையில் அனைவரையும் உள்ளடக்கிய நிதி திட்டங்கள் தொடர்பாக 01.07.2025 முதல் 30.09.2025 வரை 3 மாத விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்தை மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை தொடங்கியுள்ளது. நிதித் துறை திட்டங்களின் பலன்கள், பயனாளிகளை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
இந்த இயக்கத்தின் தொடக்க நிகழ்வு நாடு முழுவதும் 33 இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அரசுத் துறை நிறுவனங்கள், மாநில அரசுகளின் நிறுவனங்கள், வங்கித் துறையினர் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர். குஜராத்தில், இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மாநில முதலமைச்சர் காணொலி மூலம் கலந்து கொண்டார்.
3 மாதங்களில் நாட்டில் உள்ள 2.70 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்த இயக்கம் நடைபெறும்.
இந்த 3 மாத கால இயக்கத்தின்போது கீழ்க்கண்ட பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும்:
• சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கேஒய்சி தகவல்களைப் புதிப்பித்தல்
• இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டத்தில் வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல்
• பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மேலும் பலரை இணைப்பது
• டிஜிட்டல் மோசடி தடுப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வுகள்.
இந்த இயக்கத்தின் முதல் நாளில், நாடு முழுவதும் 2087 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களுக்குப் பயனாளிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
----
AD/TS/PLM/KPG/KR
(Release ID: 2141314)
(Release ID: 2141497)
Read this release in:
Urdu
,
Manipuri
,
Odia
,
Gujarati
,
English
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Kannada
,
Malayalam