பிரதமர் அலுவலகம்
இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை பிரதமர் வரவேற்றுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUN 2025 1:29PM by PIB Chennai
இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதலாவது இந்திய விண்வெளி வீரரான குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதலாவது இந்திய விண்வெளி வீரராக குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா உள்ளார். 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள், நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களுடன் அவர் செல்கிறார்.
அவரும், மற்ற விண்வெளி வீரர்களும் வெற்றி பெற வாழ்த்துகள்!"
***
(Release ID: 2139462)
AD/TS/IR/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2139537)
வருகையாளர் எண்ணிக்கை : 37
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam