பிரதமர் அலுவலகம்
பணியாளர்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட கொள்கை, திட்டமிடல், செயல்பாடு ஆகியவை சமூகப் பாதுகாப்புக்கு வழி வகுத்துள்ளன- பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUN 2025 5:37PM by PIB Chennai
கடந்த 11 ஆண்டுகளில், மத்திய அரசு, பணியாளர்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு கொள்கைகளை வகுத்து, அவற்றை செயல்படுத்தி வருகிறது. முறையான திட்டமிடல் மற்றும் அதன் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு அமல்படுத்தப்படுவதன் மூலம் சமூகப் பாதுகாப்புக்கு வழிவகை செய்யப்படுகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்டுரை ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள அவர், இத்தகைய நடவடிக்கைகள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது:
"கடந்த 11 ஆண்டுகளில் பணியாளர்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட கொள்கை, திட்டமிடல் காரணமாக சமூகப் பாதுகாப்பில் எவ்வாறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எடுத்துரைத்துள்ளார். மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகள், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன!"
****
(Release ID: 2137373)
VJ/RB/SV/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2137499)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam