பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளித் துறை எவ்வாறு விரைவான வளர்ச்சியைக் காண்கிறது என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
10 JUN 2025 12:39PM by PIB Chennai
தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டம், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் போன்ற முக்கிய அரசு முயற்சிகளால் ஊக்குவிக்கப்பட்டு, இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளித் துறை எவ்வாறு பெரும் மாற்றத்தை நோக்கிச் செல்கிறது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இந்த முயற்சிகள் உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக மேம்படுத்துகின்றன என்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை வளரச் செய்து ஏற்றுமதிகளை ஊக்குவிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இது தொழில்நுட்ப ஜவுளித் துறையில் இந்தியாவை உலகளாவிய தலைமைத்துவமாக நிலைநிறுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு. கிரிராஜ் சிங்கின் பதிவிற்கு திரு நரேந்திர மோடி இது குறித்து பதிலளித்திருப்பதாவது:
"தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டம், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் போன்ற முக்கிய முயற்சிகளால் இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளித் துறை விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்த முயற்சிகள் உற்பத்தி, புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிக்கின்றன. இந்தியாவை உலகளாவிய தலைமைத்துவமாக நிலைநிறுத்துகின்றன.”
***
(Release ID: 2135306)
AD/TS/IR/RR/KR
(रिलीज़ आईडी: 2135343)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam