பிரதமர் அலுவலகம்
கோவா மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
30 MAY 2025 4:43PM by PIB Chennai
புதுதில்லி, மே 30, 2025
கோவா மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "கோவா மாநிலத்தின் தனித்துவமான கலாச்சாரம், நாட்டின் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார். கோவா மாநில மக்கள் பல்வேறு துறைகளில் வலுவான முத்திரையைப் பதித்துள்ளனர். இந்த மாநிலம் எப்போதும் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்த்து வருகிறது" என்று திரு. மோடி அதில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"கோவா மாநிலத்தில் உள்ள எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு அவர்களின் மாநில உதய தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவா மாநிலத்தின் தனித்துவமான கலாச்சாரம் இந்தியாவின் பெருமை. கோவா மாநில மக்கள் பல்வேறு துறைகளில் வலுவான முத்திரையைப் பதித்துள்ளனர். இந்த மாநிலம் எப்போதும் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்த்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், கோவாவின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் காலங்களில் அம்மாநிலம் வளர்ச்சியின் புதிய உச்சங்களை அடையட்டும்."
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132733
******
(Release ID: 2132733)
AD/TS/SV/DL
(रिलीज़ आईडी: 2132850)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam