பிரதமர் அலுவலகம்
தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர்கள் மாநாட்டிற்குப் பிரதமர் தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
25 MAY 2025 6:37PM by PIB Chennai
தில்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் மாநாட்டிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். நமது வளர்ச்சிப் பாதைகளுக்கு உத்வேகம் அளிக்க வேண்டியதன் அவசியத்தையும், இரட்டை என்ஜின் அரசின் நன்மைகள் திறம்பட மக்களை சென்றடைவதை உறுதி செய்வதையும் அவர் வலியுறுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றேன். பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் விரிவான ஆலோசனைகளை நடத்தினோம். நீர் பாதுகாப்பு, குறை தீர்ப்பு நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வேறு மாநிலங்கள் தங்கள் சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்தின. இந்த அனுபவங்களைக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது."
"நமது வளர்ச்சிப் பாதைகளுக்கு உத்வேகம் அளிக்க வேண்டியதன் அவசியத்தையும், இரட்டை என்ஜின் அரசின் நன்மைகள் திறம்பட மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதையும் நான் வலியுறுத்தினேன். தூய்மை, துப்புரவு, சுகாதார கவனிப்பு, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் பல முக்கிய துறைகளில் வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்குவது குறித்து பேசினேன்."
*****
(Release ID: 2131172)
TS/SMB/SG
(रिलीज़ आईडी: 2131192)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam