உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, புதுதில்லியில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) பதவி அமர்த்தல் விழா மற்றும் ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவுக்கு தலைமை விருந்தினராகப் பங்கேற்பு
Posted On:
23 MAY 2025 4:36PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, இன்று புதுதில்லியில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) பதிவி அமர்த்தல் விழா மற்றும் ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். இந்த நிகழ்வில் மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் உட்பட உயரதிகார்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, சவாலான சூழ்நிலைகளில் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு சாதனங்களுடன் தொடங்கிய ஒரு அமைப்பு, உலகின் மிகப்பெரிய, மதிப்புவாய்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையாக உருவெடுத்துள்ளது. 1965-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரையிலான எல்லைப் பாதுகாப்புப் படையின் நீண்ட பயணம் அதன் உறுதியான செயல்பாடுகளால் நிலை நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சர்வதேச அளவில் சிறப்பான நிலையை எட்டுவதற்கு தேசத்தின் மீதான பக்தி எவ்வாறு அனைத்து சிரமங்களையும் சமாளிக்க முடியும் என்பதற்கு எல்லைப் பாதுகாப்புப் படை சிறந்த முன்னுதாரணமாக உள்ளது என்று அவர் கூறினார். 45 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலான வெப்பநிலை அல்லது கடும் குளிர், அடர்ந்த வனப்பகுதிகள், கரடு முரடான சாலை மற்றும் செங்குத்தான மலைகள், கடலோரப் பகுதிகள் போன்ற அனைத்து கடினமான சூழ்நிலைகளிலும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தேசப்பக்தி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு இந்தப் பெருமையைப் பெற்று தந்துள்ளதாக எடுத்துரைத்தார். நாட்டின் எல்லைப்பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் படை ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது என்றும், எல்லைப் பாதுகாப்புப் படையினரின் துணிச்சல் மிக்க செயல்பாடுகள் காரணமாக சவால்கள் நிறைந்த வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான்எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் திரு அமித் ஷா மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130749
----
SG/TS/SV/KPG/RR/DL
(Release ID: 2130804)