பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னேறி வரும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை புதுதில்லியில் மே 23 அன்று பிரதமர் தொடங்கி வைப்பார்

கவனம் செலுத்தப்படும் துறைகள்: சுற்றுலா, வேளாண் உணவு பதப்படுத்துதல், ஜவுளி, தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, எரிசக்தி, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகள்

வடகிழக்குப் பிராந்தியத்தை வாய்ப்பின் நிலமாக எடுத்துக் காட்டுதல் மற்றும் உலக, உள்நாட்டு முதலீட்டை ஈர்த்தல் உச்சி மாநாட்டின் நோக்கமாகும்

Posted On: 22 MAY 2025 4:13PM by PIB Chennai

வடகிழக்குப் பிராந்தியத்தை வாய்ப்பின் நிலமாக எடுத்துக் காட்டுதல், உலக, உள்நாட்டு முதலீட்டை ஈர்த்தல், முக்கியமான பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைத்தல் என்ற நோக்கத்துடன் நடைபெறும், முன்னேறி வரும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை புதுதில்லி பாரத் மண்டபத்தில் மே 23 அன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார்.

தொடர்ச்சியான மக்கள் சந்திப்புகள், தூதர் சந்திப்பு உள்ளிட்ட மாநிலங்களின் வட்டமேசைகள், வடகிழக்குப் பிராந்திய மாநில அரசுகளின் தீவிர ஆதரவுடன் மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இருதரப்பு சந்திப்புகள் போன்ற உச்சிமாநாட்டுக்கு முந்தைய செயல்பாடுகளின் நிறைவாக மே 23, 24 ஆகிய தேதிகளில் முன்னேறி வரும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அமைச்சக அமர்வுகள், வணிகத்திற்கும், அரசுக்குமான அமர்வுகள், வணிகத்திற்கும் வர்த்தகத்திற்குமான அமர்வுகள், புத்தொழில்கள் மற்றும் கண்காட்சிகளின் கொள்கை, முதலீட்டு ஊக்குவிப்புக்கு மாநில அரசு மற்றும் மத்திய அமைச்சகங்களால் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த உச்சிமாநாடு இருக்கும்.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் வேளாண் உணவு பதப்படுத்துதல் மற்றும் துணைத் தொழில்கள், ஜவுளி, கைத்தறி, கைவினைப் பொருட்கள், சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள், உள்கட்டமைப்பு மற்றும் சரக்குப் போக்குவரத்து, எரிசக்தி, பொழுதுபோக்கு, விளையாட்டுகள் உள்ளிட்ட முதலீட்டை ஊக்குவிக்கும் துறைகள் மீது முதன்மை கவனம் செலுத்தப்படும்.

***

(Release ID: 2130507)
AD/SM/SMB/RR/KR

 


(Release ID: 2130531)