பிரதமர் அலுவலகம்
ஜெர்மனியின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு ஃபிரெட்ரிக் மெர்ஸூக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
20 MAY 2025 6:14PM by PIB Chennai
ஜெர்மனியின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு ஃபிரெட்ரிக் மெர்ஸூக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா- ஜெர்மனி இடையே உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“பிரதமர் திரு ஃபிரெட்ரிக் மெர்ஸுடன் @_FriedrichMerz பேசி, பொறுப்பேற்றிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்தியா- ஜெர்மனி இடையேயான எங்களின் உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டிருப்பதை வலியுறுத்தினேன். பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் இணைந்து நிற்கிறோம்.”
***
(Release ID: 2129989)
SM/SMB/AG/DL
(Release ID: 2130017)