பிரதமர் அலுவலகம்
தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
11 MAY 2025 2:32PM by PIB Chennai
தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.05.2025) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நமது விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்க்கும் நாள் இது என்று கூறியுள்ள திரு நரேந்திர மோடி, 1998-ம் ஆண்டு பொக்ரான் சோதனையை நினைவு கூர்ந்துள்ளார். அறிவியல் ஆராய்ச்சி மூலம் எதிர்கால சந்ததியினருக்கு அதிகாரம் அளிப்பதற்கான அரசின் முயற்சிகளை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள்! நமது விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்க்கவும் அவர்களுக்கு நன்றி தெரவிக்கவும், 1998-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொக்ரான் சோதனைகளை நினைவுகூரவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவை நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையில், குறிப்பாக தன்னம்பிக்கைக்கான நமது தேடலில் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தன.
நமது மக்களால் முன்னேறிச் செல்லும் இந்தியாவானது விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு, பசுமை தொழில்நுட்பம் உட்பட பல தொழில்நுட்பங்களில், பல்வேறு அம்சங்களில் உலகளாவிய முன்னணி நாடாக வளர்ந்து வருகிறது. அறிவியல் ஆராய்ச்சி மூலம் எதிர்கால சந்ததியினருக்கு அதிகாரம் அளிப்பதற்கான எங்கள் செயல்பாடுகளை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். தொழில்நுட்பம் மனிதகுலத்தை மேம்படுத்தட்டும். நமது தேசத்தைப் பாதுகாக்கட்டும். எதிர்கால வளர்ச்சியைத் தூண்டட்டும்."
****
Release ID: 2128132
TS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2128138)
आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam