பிரதமர் அலுவலகம்
புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
09 MAY 2025 2:21PM by PIB Chennai
இந்திய மக்கள் சார்பாக புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமைத்துவத்தை, உலகளாவிய அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சேவையை மேம்படுத்துவதில் அதன் ஆழ்ந்த முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு, திரு மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“புனித போப் பதினான்காம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சேவையின் கொள்கைகளை முன்னேற்றுவதில் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் கத்தோலிக்க திருச்சபையில் அவரது தலைமைத்துவம் தொடங்குகிறது. நமது பகிரப்பட்ட மதிப்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக, புனித ரோம் கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்ந்து உரையாடலுக்கும், ஈடுபாட்டிற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.”
***
(Release ID: 2127859)
TS/SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2127900)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada