மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நீட் தேர்வுக்கான முக அங்கீகார முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியது
Posted On:
05 MAY 2025 2:53PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய தகுதி நுழைவுத் தேர்வின் போது (நீட்) இந்திய தனித்துவ அடையாள ஆணையம், முக அங்கீகாரத்தைப் பயன்படுத்துவது குறித்த நிரூபணச் சான்று (பிஓசி) சரிபார்ப்பை வெற்றிகரமாக செயல்படுத்தியது.
மேம்பட்ட பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்வு பாதுகாப்பு மற்றும் மாணவர் சரிபார்ப்பு செயல்முறைகளை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் படியைக் குறிக்கும் வகையில், தேசிய தகவல் மையம் மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் மிகப்பெரிய நுழைவுத் தேர்வுகளில் ஒன்றில் மாணவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கும் வழிமுறையாக ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரத்தின் சாத்தியக்கூறு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதை நிரூபணச் சான்று (பிஓசி) நோக்கமாகக் கொண்டிருந்தது.
நிரூபணச் சான்றின் போது, தில்லியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நீட் தேர்வு மையங்களில் ஆதார் முக அங்கீகார தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மேலும் தேசிய தகவல் மையத்தின் மின்னணு உள்கட்டமைப்பு மற்றும் தேசிய தேர்வு முகமையின் தேர்வு நெறிமுறைகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டது.
ஆதாரின் பயோமெட்ரிக் தரவுத்தளத்தைப் பயன்படுத்தி முக அங்கீகாரம் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. பிஓசி-ன் முடிவுகள் மாணவர் சரிபார்ப்பில் மிக உயர்ந்த அளவிலான துல்லியம் மற்றும் செயல்திறனை எடுத்துக்காட்டியது.
இந்த முயற்சி, பெரிய அளவிலான தேர்வுகளில் அடையாள சரிபார்ப்புக்கான பாதுகாப்பான, அளவிடக்கூடிய மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற தீர்வாக ஆதார் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தக்கூடிய திறனையும் வெளிப்படுத்தியது. அதன் எதிர்கால பயன்பாட்டு நிகழ்வுகளின் திறனையும், நுழைவுத் தேர்வுகளின் போது ஆள்மாறாட்டம் செய்யும் முயற்சிகளை கணிசமாகக் குறைப்பதில் அது எவ்வாறு பங்கு வகிக்க முடியும் என்பதையும் இது சுட்டிக்காட்டியது.
பொதுச் சேவைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த மின்னணு கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை இந்த கூட்டு முயற்சி பிரதிபலிக்கிறது.
***
(Release ID: 2127017)
TS/IR/AG/KR
(Release ID: 2127040)
Visitor Counter : 18