WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

உலகளாவிய ஊடக உரையாடல் 2025: வேவ்ஸ் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு, மரபுகள் மற்றும் பாரம்பரியத்திற்கு குரல் கொடுப்பதில் ஒத்துழைக்க உறுப்பு நாடுகள் ஒப்புதல்

 Posted On: 02 MAY 2025 3:20PM |   Location: PIB Chennai

படைப்பாற்றலை ஊக்குவிப்பதில் உலகளாவிய ஒத்துழைப்பு என்பது ஒருவருக்கொருவர் கலாச்சாரங்களுக்கு இடையிலான உணர்திறன்களைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில், முன்னேறுவதற்கான வழி இதுவாகும். இது நடந்துகொண்டிருக்கும் உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் (WAVES 2025) போது மும்பையில் நடைபெற்ற உலகளாவிய ஊடக உரையாடலின் பல பயன்களில்  ஒன்றாகும். எனவே, நாடுகளில் படைப்பு வெளிகளை விரிவுபடுத்துவது, டிஜிட்டல் உயர்வு தாழ்வுகளை குறைக்கும் பாதையில் நாம் அனைவரும் அடியெடுத்து வைப்பதால், நமது கூட்டு முன்னேற்றத்திற்கு முக்கியமாகும் என்று உரையாடலில் பங்கேற்ற நாடுகள் உணர்ந்தன. அதிகரித்து வரும் உலகமயமாக்கப்பட்ட ஊடக சூழலுக்கு மத்தியில் உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் அரசுகளின் பங்கை மையமாகக் கொண்டு, உறுப்பு நாடுகள் வேவ்ஸ்  பிரகடனத்தை ஏற்றுக்கொண்டன.

உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களை சித்தரிக்கும் திரைப்படங்கள் மக்களை நெருக்கமாகக் கொண்டு வருவதில் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளன என்ற உணர்வை உலகளாவிய ஊடக உரையாடல் எதிரொலித்தது. மேலும் பங்கேற்கும் நாடுகள் இந்த விஷயத்தில் இந்தியத் திரைப்படங்களின் பங்கைப் பாராட்டின. கதைசொல்லலின் ஒரு பொழுதுபோக்கு வடிவமாக, திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்க ஒரு வலுவான சக்தியாகச் செயல்படுகின்றன. பொழுதுபோக்கு உலகத்தை மறுவரையறை செய்யும் கதை சொல்லும் கலையில் தொழில்நுட்பத்தின் சங்கமத்துடன், படைப்பாளியின் பொருளாதாரத்தில் ஒரு வலுவான சக்தியாக தனிப்பட்ட கதைகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. சில உறுப்பு நாடுகள் "பொறுப்பான ஊடகவியலை" மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொண்டன, இதை வேவ்ஸ் மன்றத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்று அவர்கள் புரிந்து கொண்டனர்.

வேவ்ஸ் 2025 - உலகளாவிய சமூகத்தின் ஒரு நுண்ணிய பிரபஞ்சம் என்று கூறிய  இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், உச்சிமாநாடு உள்ளடக்க படைப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் காட்சி கலைஞர்களை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைத்து ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கான எதிர்கால செயல்திட்டத்தைப் பற்றி விவாதிப்பதாகக் கூறினார்.

டாக்டர் ஜெய்சங்கர் தமது உரையின் போது, 2025 ஆம் ஆண்டு உலகளாவிய ஊடக உரையாடலில் பரிசீலனையில் உள்ள பரந்த வரையறைகளைத் தொட்டுக் காட்டினார். வலுவான கலாச்சார பரிமாணத்தைக் கொண்ட உலக ஒழுங்கு இன்று மாற்றத்தின் கீழ் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். "நமது மரபுகள், பாரம்பரியம், கருத்துக்கள், நடைமுறைகள் மற்றும் படைப்பாற்றலுக்கு நாம் குரல் கொடுப்பது அவசியம்" என்று அவர் கூறினார்.

தொழில்நுட்பமும் பாரம்பரியமும் கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்றும், தொழில்நுட்பம் நமது பரந்த பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தவும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஆழப்படுத்தவும் முடியும் என்றும் அவர் கூறினார். "பொருத்தமான திறன் மேம்பாடு மூலம் படைப்பாற்றல் மிக்க ஒத்துழைப்புகளின் யுகத்திற்கு இளம் திறமையாளர்களை தயார்படுத்துவது மிகவும் முக்கியம். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் உத்வேகத்துக்கு புதுமை முக்கியமானது" என்று அவர் எடுத்துரைத்தார்.

வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில், சாத்தியக்கூறுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை, ஆனால் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது, அதே நேரத்தில் சார்புகளைக் குறைத்தல், உள்ளடக்கத்தை ஜனநாயகப்படுத்துதல் மற்றும் அதன் நெறிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை தேவை. உலகளாவிய பணியிடம் மற்றும் உலகளாவிய பணியாளர்களுக்கு, மனநிலைகள், கட்டமைப்புகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் மாற்றங்கள் தேவை" என்று டாக்டர் ஜெய்சங்கர் கூறினார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை  அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தமது தொடக்க உரையில், கலாச்சாரம் எல்லைகளைத் தாண்டி மக்களை இணைக்கும் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது என்று கூறினார். தொழில்நுட்பம் நமது கதைகளைச் சொல்லும் விதத்தை மறுவடிவமைத்து வருவதால், உள்ளடக்க உருவாக்கமும் நுகர்வும் வேகமாக மாறி வருவதாக அவர் மேலும் கூறினார். உள்ளூர் உள்ளடக்க உருவாக்கத்தை ஊக்குவிக்க வேண்டிய ஒரு திருப்புமுனையில் நாம் இருக்கிறோம் என்றார் அவர்.

கனவுகளின் நகரமான மும்பைக்கு 77 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை வரவேற்ற திரு வைஷ்ணவ், ஒத்துழைப்புகளின் முக்கிய பங்கை வலியுறுத்தினார், மேலும் பொதுவான வெற்றிக்கு, கூட்டு தயாரிப்பு ஒப்பந்தங்கள், கூட்டு நிதிகள் மற்றும் டிஜிட்டல் ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கவும், சகோதரத்துவத்தை வளர்க்கவும், உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கவும் உதவும் ஒரு பிரகடனத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இவ்வாறு, உலகளாவிய படைப்பாற்றல் பாலத்தை கருத்துக்களின் எக்ஸ்பிரஸ் பாதையாக விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மூத்த அமைச்சர்கள் மட்டத்திலான  குழுக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்திய விவாதங்களின் போதுபங்கேற்கும் நாடுகளுக்கு 32 கிரியேட் இன் இந்தியா சவால்கள் குறித்து தெரிவிக்கப்பட்டதுஇதன் விளைவாக இந்த உச்சிமாநாட்டின்  முதல் பருவத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 700 க்கும் மேற்பட்ட சிறந்த படைப்பாளர்களை அடையாளம் காண முடிந்தது. அடுத்த பதிப்பிலிருந்து, இந்த சவால்கள் 25 உலகளாவிய மொழிகளில் நடத்தப்படும் என்று இந்தியா உறுப்பினர்களுக்குத் தெரிவித்தது. இதனால் உலகம் முழுவதிலுமிருந்து வெவ்வேறு மொழிகளில் படைப்புத் திறமையாளர்களை அடையாளம் காண முடியும். இது வேவ்ஸ் மன்றத்தில் அவர்களின் படைப்பு உள்ளடக்கத்தை வெளிப்படுத்த உதவும்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், செயலாளர் (தகவல் மற்றும் ஒலிபரப்பு) திரு சஞ்சய் ஜாஜு மற்றும் மத்திய அரசின் பிற மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

****

 

(Release ID: 2126127)

SM/PKV/KPG/DL


Release ID: (Release ID: 2126268)   |   Visitor Counter: 14