WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை 2024-25 குறித்த புள்ளிவிவர கையேட்டை தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் நாளை வேவ்ஸ் 2025 நிகழ்வில் வெளியிடவுள்ளது

 Posted On: 02 MAY 2025 2:29PM |   Location: PIB Chennai

வேவ்ஸ் 2025-ல்  ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை 2024-25 பற்றிய புள்ளிவிவர கையேடு ஒன்றை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நாளை  வெளியிடவுள்ளதுநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்  ஆற்றல் கொண்ட சேவைத் துறையின் ஒரு முக்கிய அங்கமாக ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை உள்ளது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சூழல் அமைப்பு வளர்ந்துவரும் ஒரு  துறையாகும்அண்மைக்கால மதிப்பீட்டின்படி 2027-ம் ஆண்டில் கூட்டான வருடாந்தர வளர்ச்சி விகிதத்தில்  7% அதிகரித்து 3067 பில்லியன் ரூபாயை  எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் இந்தத் துறையில் உள்ள பிற பங்குதாரர்களின் தரவுத் தேவையைக் கருத்தில் கொண்டு, புதுப்பிக்கப்பட்ட தரவுகளுடன் கூடிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை 2024-25 பற்றிய புள்ளிவிவர கையேடு நாளை வேவ்ஸ் 2025-ல் வெளியிடப்பட உள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

1957-ல் 5,932 ஆக இருந்த பதிவுசெய்யப்பட்ட அச்சு வெளியீடுகள் 2024-25-ல் 1,54,523 ஆக உயர்ந்தன. குழந்தைகள் இலக்கியம், வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டங்கள், ஆளுமைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகள், நவீன இந்தியாவின் கட்டமைப்பாளர்கள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் மொத்தம் 130 நூல்கள் 2024-2025-ம் ஆண்டில் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளன.

டிடிஎச் சேவை மூலம் மார்ச் 2025க்குள் 100% புவியியல் பரப்பளவு எட்டப்பட்டுள்ளது. 2004-ல் 33 அலைவரிசைகள் என்றிருந்த தூர்தர்ஷன் இலவச டிஷ் அலைவரிசைகள்  2025-ல் 381 ஆக அதிகரித்தன

2025, மார்ச் நிலவரப்படி அகில இந்திய வானொலி மூலம் எட்டப்பட்ட மக்கள்தொகை 98%. 2000-வது ஆண்டில் 198 ஆக இருந்த வானொலி நிலையங்களின் எண்ணிக்கை 2025-ல் 591 ஆக உயர்ந்தது.

2004-05- ல் 130 ஆக இருந்த தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகள் 2024-25-ல் 908 ஆக அதிகரித்தன

2001-ல் 4 ஆக இருந்த  தனியார் பண்பலை வானொலி நிலையங்கள் 2024-ல் 388 ஆகஉயர்ந்தன.

1983 ஆம் ஆண்டில் சான்றளிக்கப்பட்ட இந்திய திரைப்படங்கள் 741. 2024-25-ம் ஆண்டில் அவை 3455 ஆக அதிகரித்தன. 2024-25 வரை மொத்தம் சான்றளிக்கப்பட்ட இந்திய திரைப்படங்கள் எண்ணிக்கை 69,113.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:          https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126105

********

SM/SMB/KPG/SG

 


Release ID: (Release ID: 2126245)   |   Visitor Counter: 16