தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் அனிமேஷன் பட சவால் - 42 இறுதிப் போட்டியாளர்கள் அறிவிப்பு
Posted On:
19 APR 2025 12:03PM
|
Location:
PIB Chennai
வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவில் படைப்போம் போட்டியின் (கிரியேட் இன் இந்தியா சேலஞ்ச்) ஒரு பகுதியாக நடைபெறும் அசைபட அல்லது இயங்குபட (அனிமேஷன்) உருவாக்கப் போட்டியின் (AFC) இறுதிப் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய அனிமேஷன், விஎஃப்எக்ஸ், ஆக்மென்டட் ரியாலிட்டி / விர்ச்சுவல் ரியாலிட்டி, மெய்நிகர் தயாரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அனிமேஷனின் முழு பிரிவையும் கதைசொல்லலில் கொண்டு வந்த சிறந்த 42 படங்கள் இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளன. இந்த திறமையான பங்கேற்பாளர்கள் இப்போது 2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெறவுள்ள வேவ்ஸ் உச்சி மாநாட்டின் போது தங்கள் படைப்புகளை முன்வைக்க வாய்ப்பு கிடைக்கும். முதல் 3 வெற்றியாளர்களுக்கு தலா ₹5 லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
முதல் 42 இறுதிப் போட்டியாளர்களின் தேர்வு கடுமையான மதிப்பீட்டு செயல்முறையின் அடிப்படையில் நடைபெற்றது.
வேவ்ஸ் 2025-ல் அனிமேஷன் போட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகெங்கிலும் உள்ள அமெச்சூர் ஆர்வலர்கள், திறமையான மாணவர்கள், அனுபவமிக்க நிபுணர்களிடமிருந்து 1900 பதிவுகளும் 419 மாறுபட்ட உள்ளீட்டுப் படைப்புகளும் பெறப்பட்டது. இந்த உற்சாகமான பங்கேற்பு அனிமேஷன் துறையில் புதிய படைப்பு குரல்களை அடையாளம் கண்டு வளர்ப்பதில் போட்டியின் முக்கிய பங்கை எடுத்துக் காட்டுகிறது.
திறமையை வெளிப்படுத்துவதைத் தாண்டி, இந்த முயற்சி அனைத்து நிலைகளிலும் வழிகாட்டுதலுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. அனைத்து போட்டியாளர்களும், அவர்கள் தங்களது வெற்றி அல்லது தோல்வியைப் பொருட்படுத்தாமல், இதில் பங்கேற்று விளக்க அமர்வுகளில் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த அமர்வுகள் திறன்களைச் செம்மைப்படுத்துதல், தொழில்துறையின் சிக்கல்களை அறிந்து செயல்படுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தின.
*****
Release ID: 2122837
PLM/SG
Release ID:
(Release ID: 2125067)
| Visitor Counter:
11
Read this release in:
Telugu
,
Khasi
,
English
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam