தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு இந்திய சினிமாவுக்கான தேசிய அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டது

प्रविष्टि तिथि: 23 APR 2025 11:27AM by PIB Chennai

அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் நேற்று (ஏப்ரல் 22, 2025) செவ்வாய்க்கிழமை மும்பையில் உள்ள தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக அலுவலகத்தையும் இந்திய சினிமாவுக்கான தேசிய அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர்.

இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சங்கர் லால்வானி (இந்தூர் மக்களவைத் தொகுதி), திரு ஹரிபாய் படேல் (மெஹ்சானா மக்களவைத் தொகுதி), திரு குல்தீப் இந்தோரா (கங்காநகர் மக்களவைத் தொகுதி), டாக்டர் சுமர் சிங் சோலங்கி (மாநிலங்கள் அவை), திரு ஜியா உர் ரஹ்மான் (சம்பல் மக்களவைத் தொகுதி), உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளர் திரு. டி. ராமகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இந்திய சினிமாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து காட்சிப்படுத்துவதற்கான அருங்காட்சியகத்தை  நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

 

***

(Release ID: 2123693)
TS/PLM/RR/KR

 


(रिलीज़ आईडी: 2123760) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam