பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்க துணை அதிபர் மற்றும் குடும்பத்தினருக்கு பிரதமர் விருந்தளித்தார்

பிப்ரவரி மாதம் வாஷிங்டன் டி.சி.க்கு தாம் மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்தையும், அதிபர் திரு டிரம்ப்புடன் நடத்திய விவாதங்களையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்

இந்த ஆண்டு பிப்ரவரியில் பாரீசில் சந்தித்ததைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து பிரதமரும், துணை அதிபர் திரு வான்ஸும் ஆய்வு செய்தனர்

இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகளின் முன்னேற்றத்தையும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மற்றும் எரிசக்தி, பாதுகாப்பு, உத்திசார் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் அவர்கள் வரவேற்கிறார்கள்

பரஸ்பர நன்மை தரும் பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்

இந்தியாவில் தங்கும் நாட்கள் இனிதாக அமைந்திட துணை அதிபர் மற்றும் குடும்பத்தினருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

அதிபர் திரு டிரம்ப்புக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவரது இந்திய வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பத்தாகவும் கூறினார்

Posted On: 21 APR 2025 8:50PM by PIB Chennai

அமெரிக்க துணை அதிபர் மாண்புமிகு திரு ஜே.டி.வான்ஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அவருடன், அவரது துணைவி திருமதி உஷா வான்ஸ், அவர்களது குழந்தைகள் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

 

‘அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்’ (மகா) மற்றும் ;’047-இல்  வளர்ந்த பாரம்’ ஆகிய திட்டங்களின் வலிமையைப் பயன்படுத்தி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நெருங்கிய ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை வகுத்த அதிபர் திரு டிரம்ப்புடன் நடத்திய பயனுள்ள விவாதங்களை பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார்.

 

இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமரும், துணை அதிபர் திரு வான்ஸும் ஆய்வு செய்து ஆக்கப்பூர்வமாக மதிப்பீடு செய்தனர்.

 

பரஸ்பரம் பயனளிக்கும் இந்திய-அமெரிக்க உறவுகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவர்கள் வரவேற்றனர். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு மக்களின் நலனில் கவனம் செலுத்தியது. அதேபோல், எரிசக்தி, பாதுகாப்பு, உத்திசார் தொழில்நுட்பங்கள் மற்றும் இதர துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 

இரு தலைவர்களும் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை முன்னோக்கி செல்வதற்கான பாதையாக முன்வைத்தனர்.

 

துணை அதிபர், அந்நாட்டின் இரண்டாவது பெண்மணி மற்றும் அவர்களது குழந்தைகள்  இந்தியாவில் தங்கி இருக்கும்  நாட்கள் இனிமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திட பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

அதிபர் திரு டிரம்ப்புக்கு தனது மனமார்ந்த வாழ்த்துளைத் தெரிவித்த பிரதமர், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு அவர் வருகை தருவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகக் கூறினார்.

***

RB/DL


(Release ID: 2123335) Visitor Counter : 12