தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சிலி அதிபர் கேப்ரியல் போரிக் ஃபோன்ட் பயணத்தின் போது சிலி அமைச்சர் கரோலினா அரேடோண்டோவை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் சந்தித்தார்
Posted On:
02 APR 2025 4:27PM by PIB Chennai
சிலி அதிபர் திரு கேப்ரியல் போரிக் ஃபான்ட்டின் ஐந்து நாள் இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், சிலி நாட்டின் கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரிய அமைச்சர் திருமதி கரோலினா அரேடோண்டோவை புதுதில்லியில் சந்தித்தார்.
வேவ்ஸ் 2025- நிகழ்வுக்கு சிலி நாட்டுக்கு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் அழைப்பு
2025 மே 1 முதல் 4 வரை நடைபெறும் உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ்) தொடர்பான பல்வேறு விவாதங்களில் அமைச்சர் ஈடுபட்டார். இந்திய சிற்பங்களை சித்தரிக்கும் ஓவியத்தை திருமதி கரோலினா அரேடோண்டோவுக்கு வழங்கினார்.
இந்த கூட்டத்தில் சிலி தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் திரு மார்டின் கோர்மாஸ், வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் திரு லட்சுமி சந்திரா மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை செயலாளர் (திரைப்படங்கள்) டாக்டர் அஜய் நாகபூஷண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2117807)
TS/IR/AG/SG/DL
(Release ID: 2117997)
Visitor Counter : 16
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali-TR
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam