WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவ்ஸ் 2025 இந்தியாவின் மிகப்பெரிய காஸ்ப்ளே சாம்பியன்ஷிப்பை நடத்துகிறது - பாப் கலாச்சாரம், படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது

 प्रविष्टि तिथि: 30 MAR 2025 11:13AM |   Location: PIB Chennai


கிரியேட்டர்ஸ் ஸ்ட்ரீட், எபிகோ கான், தெலங்கானா அரசு, ஐசிஏ இந்திய காமிக்ஸ் சங்கம், மீடியா - பொழுதுபோக்கு சங்கம் (MEAI), தெலங்கானா விஎஃப்எக்ஸ் அனிமேஷன் - கேமிங் அசோசியேஷன் (TVAGA) ஆகியவை மத்திய அரசின் தகவல் - ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க காஸ்ப்ளே போட்டியான வேவ்ஸ் காஸ்ப்ளே சாம்பியன்ஷிப் போட்டியை (WAVES Cosplay Championship) பெருமையுடன் அறிவிக்கின்றன. 2025 மே 1-4-ல் மும்பையில் நடைபெறவுள்ள ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் (WAVES) நடைபெறவுள்ள இந்த மைல்கல் நிகழ்வு, இந்தியாவின் மிகவும் திறமையாளர்களை ஒன்றிணைத்து, பாப் கலாச்சார உலகில் அவர்களின் கலைத்திறன், அர்ப்பணிப்பைக்  கொண்டாடும்.

வேவ்ஸ் காஸ்ப்ளே சாம்பியன்ஷிப் பற்றி:

வேவ்ஸ் காஸ்ப்ளே சாம்பியன்ஷிப் போட்டியானது, பங்கேற்பாளர்களுக்கு தங்கள் திறமைகள், படைப்பாற்றல், பாப் கலாச்சாரத்திற்கான ஆர்வத்தை வெளிப்படுத்த உலகத் தரம் வாய்ந்த தளத்தை வழங்குவதன் மூலம் இந்தியாவின் வளர்ந்து வரும் காஸ்ப்ளே சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சாம்பியன்ஷிப் இந்தியாவின் விரிவடைந்து வரும் பொழுதுபோக்கு, ஏவிஜிசி-எக்ஸ்ஆர் துறையின் வளர்ச்சியுடன் இணைந்து அமைகிறது. ஆடை வடிவமைப்பு, செயல்திறன், பாத்திர சித்தரிப்பு ஆகியவற்றில் சுய வெளிப்பாடு, புதுமையை ஊக்குவிக்கிறது.

போட்டி சிறப்பம்சங்கள்:

இறுதிப் போட்டி (கிராண்ட் ஃபினாலே): 80-100 இறுதிப் போட்டியாளர்கள் தங்கள் காஸ்ப்ளேக்களை வேவ்ஸ் 2025 மேடையில் நேரடியாக வழங்குவார்கள்.

நடுவர் குழு: மதிப்புமிக்க வல்லுநர்கள், சர்வதேச விருந்தினர்கள், காஸ்ப்ளே நிபுணர்கள் நடுவர் குழுவில் இடம்பெறுவார்கள்.

பல்வேறு வகைகள்: இந்திய புராணங்கள், பாப் கலாச்சாரம், அனிம், மங்கா, டிசி, மார்வெல் என பலவற்றை உள்ளடக்கியது.

உலகளாவிய வெளிப்பாடு: சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற ஒரு வாய்ப்பு.

பரிசுத் தொகை: 1,50,000/-க்கு மேல் பரிசுத் தொகை.

போட்டி அமைப்பு - தேர்வு விதிகள்

முக்கிய தேதிகள்

*பதிவு தொடக்கம்: மார்ச் 28, 2025

* சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு: 2025 ஏப்ரல் 7

* வேவ்ஸ் காஸ்ப்ளே சாம்பியன்ஷிப் கிராண்ட் ஃபினாலே: 2025 மே 1-4

மேலும் விவரங்கள், பதிவுத் தகவலுக்கு, https://creatorsstreet.in/ என்ற தளத்தைப் பார்வையிடவும். பதிவு இணைப்பு: https://forms.office.com/r/xpeg7sDASm

***

PLM/KV

 


रिलीज़ आईडी: 2116860   |   Visitor Counter: 57

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Odia , English , Assamese , Urdu , Nepali , हिन्दी , Marathi , Bengali-TR , Gujarati , Telugu , Malayalam