குடியரசுத் தலைவர் செயலகம்
சைத்ரா சுக்லாடி, உகாதி, குடி படவா, சேத்தி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு செய்ரோபா பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
29 MAR 2025 4:01PM by PIB Chennai
சைத்ரா சுக்லடி, உகாதி, குடி படவா, சேதி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு செய்ரோபா ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தமது சக குடிமக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "சைத்ர சுக்லடி, உகாதி, குடி படவா, சேதி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு செய்ரோபா ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வசந்த காலத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாக்கள், இந்திய புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. இந்த விழாக்கள் நமது கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதுடன், சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்துகின்றன. இந்தப் பண்டிகைகளின் போது, புதிய அறுவடையின் மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறோம். இயற்கைக்கு நமது நன்றியைத் தெரிவிக்கிறோம்.
இத்தகைய புனிதமான தருணங்களில், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி, நமது தேசத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல புதிய சக்தியுடன் பணியாற்றுவோம்" என்று கூறியுள்ளார்..
***
PKV/KV
(रिलीज़ आईडी: 2116597)
आगंतुक पटल : 71