பிரதமர் அலுவலகம்
செபக் தக்ரா உலகக் கோப்பை 2025-ல் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கத்தை வென்ற ஆடவர் ரெகு அணிக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
26 MAR 2025 3:59PM by PIB Chennai
செபக் தக்ரா உலகக் கோப்பை 2025 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றதற்காக அணிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில், அவர் கூறியிருப்பதாவது:
"செபக் தக்ரா உலகக் கோப்பை 2025-ல் தனித்துவமான விளையாட்டு சிறப்பை வெளிப்படுத்திய நமது அணிக்கு வாழ்த்துக்கள்! இந்த அணி 7 பதக்கங்களை வென்றுள்ளது. ஆடவர் ரெகு அணி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.
இந்த அற்புதமான செயல்திறன் உலகளாவிய செபக் தக்ரா அரங்கில் இந்தியாவுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை குறிக்கிறது”.
***
(Release ID: 2115251)
TS/IR/RR/KR
(Release ID: 2115329)
Visitor Counter : 20
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada