தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கருப்பொருள் அடிப்படையிலான இசைப் போட்டி

Posted On: 13 MAR 2025 11:46AM by PIB Chennai

உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியாவில் படையுங்கள் போட்டியின் ஒரு பகுதியாக கருப்பொருள் அடிப்படையிலான இசைப் போட்டி(தீம் மியூசிக்) நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டி இந்தியாவின் இசை உணர்வைக் கொண்டாடுவதாகும். பாடல் எழுதுவோர், பாடுவோர், இசை அமைப்போர், இசை உருவாக்குவோர் ஆகியோருக்கு இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்திய செவ்வியல் இசை, செவ்வியல் மற்றும் சமகால பாணிகளிலான கலவை இசை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் போட்டி அமைந்திருந்தது. இந்திய இசைத் துறையுடன் இணைந்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

“இந்தியாவின் பாடல்” என்பது இந்தப் போட்டியின் மையப் பொருளாகும். இந்திய இசையின் சக்தியையும், பெருமையையும் எடுத்துரைப்பதாக இந்தப் போட்டி அமைந்திருந்தது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பங்கேற்க தகுதி உள்ளவர்கள்  என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிக்கு 178 பேர் பதிவு செய்திருந்தனர்.

அசல் தன்மை, படைப்பாக்கம், போட்டியின் மையப் பொருளுக்கு பொருத்தமாக இருத்தல், இசைத்தன்மை, இசையமைக்கும் திறன், இந்திய அம்சங்களை இணைத்திருத்தல், மையப் பொருளுக்கு இயைந்ததாக நிலைத்திருத்தல் என்ற அடிப்படைகளில் போட்டிக்கு வந்த படைப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டன.

இந்திய இசைத்துறையின் நிபுணர்களால் இரண்டு நிலைகளில் இந்தப் படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டியாளர்கள் என 6 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் முதல் பரிசு பெற்றவராக ஒருவரும், இரண்டாம் பரிசு பெற்றவர்களாக ஐந்து பேரும் இருப்பார்கள்.

2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெறவுள்ள உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் இவர்கள் பரிசளித்து கௌரவிக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111104

***

TS/SMB/AG/KR

 


(Release ID: 2111195) Visitor Counter : 19