பிரதமர் அலுவலகம்
தங்களது எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பெண்களை பிரதமர் ஊக்குவித்துள்ளார்
சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெண்களிடம் பிரதமர் தனது சமூக ஊடக கணக்குகளை ஒப்படைக்கிறார்
Posted On:
03 MAR 2025 7:54PM by PIB Chennai
நமோ செயலி திறந்தவெளி மன்றத்தில் எண்ணற்ற வாழ்க்கைப் பயணங்கள் பகிரப்பட்டிருப்பது, ஊக்கமளிப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மார்ச் 8-ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில், அன்றைய தினம் தனது டிஜிட்டல் சமூக ஊடக கணக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெண்கள் பயன்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இதுபோன்ற ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பயணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு மோடி கூறியிருப்பதாவது:
"நமோ செயலி திறந்தவெளி மன்றத்தில் மிகவும் ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பயணங்கள் பகிரப்படுவதை நான் அறிகிறேன். அதில் இருந்து சில பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, மகளிர் தினமான மார்ச் 8 அன்று எனது டிஜிட்டல் சமூக ஊடக கணக்குகளை அவர்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும். இதுபோன்ற மேலும் பல வாழ்க்கைப் பயணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
***
RB/DL
(Release ID: 2107926)
Visitor Counter : 17