தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
படைப்பாளிகளுக்கான வேவ்ஸ் சவால் போட்டி
Posted On:
14 FEB 2025 3:37PM by PIB Chennai
படைப்பாளிகளும் கதைசொல்லிகளும் இந்தியாவைப் பற்றிய தங்கள் தொலைநோக்குப் பார்வையை சமூக வலைத்தளங்கள் முலம் வெளிப்படுத்த வேவ்ஸ் சவால் போட்டி ஒரு அற்புதமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டி, நாட்டின் கலாச்சார பாரம்பரியம், கண்ணுக்கினிய நிலப்பரப்புகள் உள்ளிட்டவை குறித்து படம்பிடிக்க பங்கேற்பாளர்களை அழைக்கிறது. "இதுதான் என் இந்தியா" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த சவால் போட்டி இந்தியாவின் பன்முகத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் படைப்பாற்றல் உணர்வை எடுத்துக்காட்டவும் தனித்துவமான கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும் படைப்பாளர்களை ஊக்குவிக்கிறது. இந்தப் போட்டி மே 1 முதல் 4ம் தேதி வரை மும்பையில் உள்ள ஜியோ நிறுவன மையங்களில் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2103213®=3&lang=1
***
TS/GK/RR/KR
(Release ID: 2103263)
Visitor Counter : 40