மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025 : முதல் பகுதியில் பிரதமர் திரு நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்

Posted On: 13 FEB 2025 2:23PM by PIB Chennai

2025 பிப்ரவரி 10-ம் தேதி, பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நடைபெற்ற தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் 8-வது பதிப்பின் முதல் தொடரில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுடன் பல்வேறு தலைப்புகளில் பிரதமர் விவாதித்தார்.

இதில் கலந்துகொண்ட 36 மாணவர்கள் பிரதமரிடமிருந்து ஊட்டச்சத்து, நலவாழ்வு, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், தனக்குத்தானே சவால்களை ஏற்படுத்திக்கொள்ளுதல், தலைமைத்துவப் பண்பு, புத்தகங்களுக்கு அப்பால் – 360º வளர்ச்சி, நேர்மறையான சிந்தனைகளைக் கண்டறிதல் உள்ளிட்ட  பல்வேறு மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொண்டனர். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் சிந்தனையை வளர்ப்பதுடன், கல்வி சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கான உத்திகளையும் வழங்கியது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102683

*****

TS/SV/RJ/KR


(Release ID: 2102771) Visitor Counter : 33