தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் இளம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சவால்- அடுத்த தலைமுறையின் படைப்பாற்றலைத் தூண்டுதல்
Posted On:
12 FEB 2025 5:33PM by PIB Chennai
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து விசில் வூட்ஸ் இன்டர்நேஷனல் நடத்தும் வேவ்ஸ் இளம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சவால், 12 முதல் 19 வயது வரையிலான வளரும் கதைசொல்லிகள், திரைப்படத் தயாரிப்பு உலகில் அடியெடுத்து வைப்பதற்கு ஒரு அற்புதமான தளத்தை வழங்குகிறது. படைப்பாற்றலைத் தூண்டுவதற்கும், டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கும், கதை சொல்லும் திறன்களைச் செம்மைப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட இந்த சவால் இளம் படைப்பாளிகள் 60-வினாடி திரைப்படங்களை உருவாக்குவதற்கு அழைப்பு விடுகிறது. உலக ஆடியோ விஷுவல் என்டர்டெயின்மென்ட் உச்சிமாநாட்டின் (வேவ்ஸ்) முக்கிய அங்கமாக, இது குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை அவர்களின் கற்பனையை ஆராய்வதற்கும் அவர்களின் முன்னோக்குகளை குறுகிய வடிவ கதைசொல்லல் மூலம் பகிர்ந்து கொள்வதற்கும் ஊக்குவிக்கிறது.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் மாநாட்டு மையம் மற்றும் ஜியோ வேர்ல்ட் கார்டன்ஸில் 2025 மே 1 முதல் 4 வரை நடைபெற உள்ள வேவ்ஸ், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் விவாதங்கள், ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளுக்கான முதன்மை மன்றமாக செயல்படும். இந்த நிகழ்வானது தொழில்துறை தலைவர்கள், பங்குதாரர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைத்து புதிய வாய்ப்புகளை ஆராயவும், சவால்களை எதிர்கொள்ளவும் மற்றும் இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத துறையில் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முதன்மை முயற்சியான, இந்தியாவில் சவால்களை உருவாக்குவது, வேவ்ஸ்-இன் முக்கிய அம்சமாகும். 70,000 க்கும் மேற்பட்ட பதிவுகள் மற்றும் 31 சவால்கள் தொடங்கப்பட்ட நிலையில், இந்த முயற்சி உலகம் முழுவதிலுமிருந்து ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஈர்த்துள்ளது. புதுமையின் செழிப்பான சூழலை வளர்ப்பதன் மூலம், இந்த சவால்கள் இந்தியாவை ஊடகம் மற்றும் பொழுதுபோக்குக்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102365
***
RB/DL
(Release ID: 2102504)
Visitor Counter : 26