தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் படம் உருவாக்க சவால் (ரீல்) போட்டி

Posted On: 11 FEB 2025 3:48PM by PIB Chennai

வேவ்ஸ் என்றழைக்கப்படும் உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் பட உருவாக்க (ரீல் மேக்கிங்) சவால்  போட்டி என்பது படைப்பாளிகள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மெட்டா தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி சுருக்கமான முறையில் திரைப்பட வடிவம் மூலம் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துவதாகும். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  இந்தப் போட்டியில் பங்கேற்க, கடந்த 5-ம் தேதி வரை இந்தியா மற்றும் 20 நாடுகளில் இருந்து 3,379 பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் சவால் என்ற இந்த போட்டி, வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மும்பையில் உள்ள ஜியோ நிறுவன மையங்களில் நடைபெறும். 

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அமெரிக்கா, அன்டோரா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.  படைப்புத் துறையில் இந்தியாவின் அதிகரித்து வரும் செல்வாக்கையும், உலகளவில் படைப்பாளர்களுக்கான முதன்மையான தளமாக வேவ்ஸ் வளர்ந்து வருவதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101742

***

TS/GK/RJ/DL


(Release ID: 2101997) Visitor Counter : 19