WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவ்ஸ் 2025-ல் இந்திய படைப்பாற்றல் தொடர்பான போட்டிகளில் கல்வி

 Posted On: 10 FEB 2025 3:17PM |   Location: PIB Chennai

நீடித்த வளர்ச்சி இலக்குகளில் நகர்ப்புறங்களின் முன்னேற்றம் குறித்து ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தும் விதமாக, தேசிய அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்புகளை வேவ்ஸ் பொழுதுபோக்கு உச்சிமாநாடு வழங்குகிறது. இம்மாநாடு நகர்ப்புற நிலைத்தன்மை சவால்கள் மற்றும் சாதனைகள் குறித்த தனித்துவம் மிக்க வாய்ப்பை வழங்குகிறது.

'சிட்டி குவெஸ்ட்: ஷேட்ஸ் ஆஃப் பாரத்', போன்ற புதுமையான கல்வி அடிப்படையிலான  போட்டிகள், படைப்பாற்றல் போட்டிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் போட்டிகள் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுடன் நகர்ப்புற மேம்பாட்டிற்கான அளவீடுகளை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் 56 நகரங்களின் மேம்பாடு மற்றும் சவால்களை இது ஆய்வு செய்கிறது.

நீடித்த எதிர்காலத்திற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் மேற்கொண்டு வரும் நகர்ப்புறங்களை முன்னிலைப்படுத்தும் வகையில்  இந்தத் தளம் அமைந்துள்ளது. மும்பையில் மே 1-ம் தேதி 4-ம் தேதி வரை நடைபெறும் வேவ்ஸ் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101293

***

TS/SV/KPG/DL


Release ID: (Release ID: 2101481)   |   Visitor Counter: 46