தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் விஷூவல் எஃபெக்ட்ஸ் போட்டிகள்
Posted On:
06 FEB 2025 7:47PM by PIB Chennai
உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) என்பது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் வலுவான விவாதங்கள், ஒத்துழைப்பு, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கான முதன்மைத் தளமாக செயல்படுகிறது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேவ்ஸ், இந்தியாவில் இந்தத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்கவும் பொழுதுபோக்கு தொழில்துறை தலைவர்களையும் உலகளாவிய பங்குதாரர்களையும் ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.
இந்தியாவில் படைப்பாக்கச் சவால்கள் என்பது வேவ்ஸ் போட்டிகளின் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்கு இதுவரை 70 ஆயிரத்திற்கும் அதிகமான பதிவுகள் வரப்பெற்றுள்ளன. படைப்பாக்கம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கமாகக் கொண்ட 31 போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன.
விஷூவல் எஃபெக்ட்ஸ் போட்டிக்கு தலைப்பு "அன்றாட வாழ்வில் சூப்பர் ஹீரோக்கள்". பங்கேற்பாளர்கள் விஷூவல் எஃபெக்ட்ஸ் சீக்வென்ஸ் அல்லது குறும்படங்கள் சமர்ப்பிக்கலாம்.
2 வகைமைகளில் நடத்தப்படும் போட்டிகளில் ஒன்று, பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கானது. மற்றொன்று தொழில்முறை சார்ந்தவர்களுக்கானது.
சண்டிகர் (வடக்கு மண்டலம்), மும்பை (மேற்கு மண்டலம்), கொல்கத்தா ( கிழக்கு மண்டலம்) பெங்களூரூ (தெற்கு மண்டலம்) என மண்டல வாரியான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு வகைமையிலும் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் போது அனைத்து செலவுகளுக்கான தொகையையும் பெறும் வாய்ப்பைக் கொண்டிருப்பார்கள்.
***
(Release ID: 2100417)
TS/SMB/AG/RR
(Release ID: 2100681)
Visitor Counter : 27