தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாகும்பமேளா 2025: 233 குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறது

प्रविष्टि तिथि: 05 FEB 2025 7:14PM by PIB Chennai

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்க  பெரும் அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா பகுதியில் மொத்தம் 233 குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை 24 மணி நேரமும் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுகின்றன. இந்தக் குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம், யாத்ரீகர்கள் தினமும் தூய்மையான ஆர்ஓ (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) குடிநீரைப் பெறுகிறார்கள். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 ஜனவரி 21 முதல் பிப்ரவரி 1 வரை இந்தக் குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பயனடைந்துள்ளனர்.

யாத்ரீகர்களின் வசதியை உறுதி செய்வதற்காக, நிர்வாகம் இந்த கட்டணமில்லா குடிநீர் விநியோகத்தை வழங்கி வருகிறது.  தொடக்கத்தில் இந்த சேவைக்காக லிட்டருக்கு ரூபாய் 1 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதைப் பெறுவதற்காக பக்தர்கள் நாணயங்களைச் செலுத்தலாம், அல்லது யுபிஐ ஸ்கேனிங்கை பயன்படுத்தியும் குடிநீரைப் பெறலாம். இருப்பினும், பக்தர்கள் எந்த சிரமமும் இல்லாமல் தூய்மையான தண்ணீரைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த சேவை இப்போது முற்றிலும் கட்டணமில்லாமல் மேற்கொளள்ளப்படுகிறது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100106

***

TS/IR/RJ/DL


(रिलीज़ आईडी: 2100125) आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Bengali , Assamese , Bengali-TR , Gujarati , Telugu , Kannada , Malayalam