நிதி அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        இந்திய வளர்ச்சிப் பயணத்திற்கான முதலாவது இயந்திரம் வேளாண்மை: பட்ஜெட் 2025-26 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                01 FEB 2025 1:27PM by PIB Chennai
                
                
                
                
                
                
                இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கான முதலாவது இயந்திரம் வேளாண்மை என்பதை மத்திய நிதி, பெரு நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். 2025-26 மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்து பேசிய அவர், வேளாண் வளர்ச்சி, உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தார்.  
 
பீகாரில் தாமரை விதை வாரியத்தை நிறுவுவதற்கான அரசின் முடிவை அறிவித்த அவர், இது தாமரை விதை உற்பத்தி, செயலாக்கம், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு, இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக ஒழுங்கமைக்க உதவும் சீதாராமன் கூறினார். தாமரை விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சியை வாரியம் வழங்கும் என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து அரசின் திட்டப் பலன்களையும் அவர்கள் பெறுவதை உறுதிசெய்யும் என்றும் அவர் கூறினார்.
அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய இயக்கம் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 2024 ஜூலை மாதம் முதல் நூற்றுக்கும் மேற்பட்ட விதை வகைகள் வர்த்தகத்திற்காக விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 
 
மரபணு வளங்களுக்காக பொது மற்றும் தனியார் துறைகளுக்கு பாதுகாப்பு ஆதரவை வழங்கவும், எதிர்கால உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யவும், இரண்டாவது மரபணு வங்கி அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
 
‘பருத்தி உற்பத்திக்கான இயக்கம்’ குறித்து அறிவித்த அவர், இந்த ஐந்தாண்டு இயக்கம், பருத்தி வேளாண்மையில் உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எளிதாக்கும் என்றும், கூடுதலாக நீள் இழை பருத்தி வகைகளை ஊக்குவிக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார். விவசாயிகளுக்கு சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படும் என்பதால் இலட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளுக்கு இந்த இயக்கம் பயனளிக்கும் என்று அவர் கூறினார். 
 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098404
***
TS/IR/AG/KR 
 
 
                
                
                
                
                
                (Release ID: 2098547)
                Visitor Counter : 129
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam