நிதி அமைச்சகம்
அனைத்து குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு மற்றும் விற்றுமுதல் முறையே 2.5 மற்றும் 2 மடங்கு அதிகரிக்கப்படும்
Posted On:
01 FEB 2025 1:17PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் இலக்கை எட்ட அனைத்துப் பிராந்தியங்களும் சமன்பாடான வளர்ச்சியை அடைய வேண்டியது அவசியமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் அனைவரின் வளர்ச்சி இலக்கை எட்டும் வகையில் மத்திய பட்ஜெட், வளர்ச்சிக்கான வலுவான துறைகளில் ஒன்றான குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளில் முன்மொழிந்துள்ளது.
அந்த வகையில் அனைத்து குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு மற்றும் விற்றுமுதல் முறையே 2.5 மற்றும் 2 மடங்கு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் 5 கோடியிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
உதயம் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரம்புடன் 10 லட்சம் தனிப்பயனாக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் முதல் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதிகளில் நிதி உருவாக்கப்படும். முதல் முறையாக தொழில் தொடங்கும் எஸ்இஎஸ்டி பிரிவைச் சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடி வரையிலான கடன் வழங்க ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098389
***
PKV/RR/KR
(Release ID: 2098535)
Visitor Counter : 26