நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கப்பல், விமானப் போக்குவரத்துத் துறைகளுக்கு மத்திய பட்ஜெட்டில் ஊக்கம்

Posted On: 01 FEB 2025 1:11PM by PIB Chennai

கடல்சார் தொழில் துறைக்கு ரூ.25,000 கோடி நிதியுடன் கடல்சார் மேம்பாட்டு நிதியம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.  இன்று நாடாளுமன்றத்தில் தமது பட்ஜெட் உரையில் இந்த திட்டம் கடல்சார் துறையில் போட்டித் தன்மையை ஊக்குவிக்கும் என்று கூறினார். இந்த நிதியில் 49 சதவீதம் வரை அரசு பங்களிப்பாக இருக்கும் என்றும், மீதமுள்ள தொகை துறைமுகங்கள், தனியார் துறை ஆகியவற்றிடமிருந்து திரட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தின் மூலம் இதுவரை 1.5 கோடி நடுத்தர வர்க்க மக்கள் பயன் அடைந்துள்ளதாக நிதி அமைச்சர் கூறினார். இந்தத் திட்டம் 88 விமான நிலையங்களை இணைத்து 619 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 120 புதிய இடங்களுக்கு இணைப்பை விரிவுபடுத்தி அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகள் பயன் அடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

****

(Release ID: 2098382)

TS/PLM/RR/KR


(Release ID: 2098532) Visitor Counter : 20