நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024 மார்ச் நிலவரப்படி 7.75 கோடி கிசான் கடன் அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25

Posted On: 31 JAN 2025 1:44PM by PIB Chennai

அனைத்து விவசாயிகளுக்கும், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், சமூகத்தில் பாதிக்கப்படும் பிரிவினருக்கும் வேளாண் உற்பத்தி மற்றும் வருவாயை அதிகரிப்பதற்கும் போதுமான கடன் ஆதரவை வழங்குவது  முக்கியமானது என்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 மார்ச்  நிலவரப்படி, நாட்டில் ரூ. 9.81 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ள 7.75 கோடி கிசான் கடன் அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. 2024 மார்ச் 31 நிலவரப்படி, மீன்வளத்திற்கு1.24 லட்சம் கிசான் கடன் அட்டைகளும், கால்நடை வளர்ப்புக்கு 44.40 லட்சம் கிசான் கடன் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

நிதியாண்டு 2025 முதல், மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் உள்ள உரிமைகோரல்களை விரைவாகவும், திறமையாகவும் கையாள்வதற்கும், தீர்வு காண்பதற்கும் கிசான் ரின் போர்ட்டல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் 31-க்குள், 1 லட்சம் கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 31 அக்டோபர் 2024 நிலவரப்படி பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 23.61 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் இலவச உணவு தானிய ஒதுக்கீடு சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு வழக்கமான ஒதுக்கீட்டிற்கும் கூடுதலாக உள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவது, 1 ஜனவரி 2024 முதல் நடைமுறைக்கு வருவதால், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை பூர்த்தி செய்வதற்கான அரசின் நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையை இது பிரதிபலிக்கிறது.

வேளாண் இயந்திரமயமாக்கல் தொடர்பான துணைத் திட்டம், மாநில அரசுகளுக்கு விவசாய இயந்திரங்கள் தொடர்பான பயிற்சி மற்றும் செயல்விளக்கங்கள், தனிப்பயன் பணியமர்த்தல் மையங்களை நிறுவுதல் மற்றும் பல்வேறு விவசாய உபகரணங்களைப் பெறுவதில் விவசாயிகளுக்கு உதவுவதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. டிசம்பர் 31 வரை, இந்த முயற்சியின் கீழ் 26,662 தனிப்பயன் பணியமர்த்தல் மையங்கள் நிறுவப்பட்டன. நிதியாண்டு 2025 -ல் மட்டும் 138 தனிப்பயன் பணியமர்த்தல் மையங்கள் அமைக்கப்பட்டன.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன்களை வழங்கும் நோக்கில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தை அரசு ஊக்குவித்துள்ளது. இந்த முன்முயற்சியின் மூலம் 15,000 தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டுக்கான சேவைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிரோனின் விலையில் 80 சதவீதம் மத்திய நிதியுதவியாக அதிகபட்சம் ரூ.8 லட்சம் வரை, டிரோன் வாங்குவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சுய உதவி குழுக்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கூடுதல் வருவாயை ஈட்ட முடியும்.

2024 அக்டோபர் 31, நிலவரப்படி, 1.78 கோடி விவசாயிகள் மற்றும் 2.62 லட்சம் வணிகர்கள் இ-நாம் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர். தே தேதியில், 9,204 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நிறுவனங்களில் 4,490, ரூ.237 கோடி அளவுக்கு சமபங்கு மானியங்களைப் பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்  காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097879 

***

SMB/AG/DL


(Release ID: 2098199) Visitor Counter : 11