நிதி அமைச்சகம்
உலகளாவிய எதிர்ப்பு, போட்டிகள், அதிகரித்து வரும் தற்காப்புவாதம் ஆகியவற்றிற்கிடையே நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் அதிகரிக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25
Posted On:
31 JAN 2025 2:11PM by PIB Chennai
சர்வதேச பொருளாதார, வர்த்தக எதிர்ப்புகளுக்கு இடையேயும் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25-ம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த ஏற்றுமதி (வணிகம், சேவைகள்) 6 சதவீதம் என்ற அளவில் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. சேவைகள், உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் மொத்த இறக்குமதி 6.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகளாவிய சேவைகள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2005-ல் 1.9 சதவீதத்திலிருந்து 2023-ல் இது 4.3 சதவீதத்தை எட்டியுள்ளது. 'தொலைத்தொடர்பு, கணினி, தகவல் சேவைகளில் இந்தியா உலகளாவிய ஏற்றுமதி சந்தையில் 10.2 சதவீதத்தை பிடித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097911
***
TS/PLM/RJ/KR
(Release ID: 2098082)
Visitor Counter : 18