பிரதமர் அலுவலகம்
வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள திரு டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
27 JAN 2025 8:42PM by PIB Chennai
வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள திரு டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பரஸ்பரம் பயனளிக்கும் மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு உறுதிபூண்டுள்ளோம் என்றும் நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பை நோக்கியும் நாம் இணைந்து பணியாற்றுவோம் திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"எனதருமை நண்பர் அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் @realDonaldTrump @POTUS உடன் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். பரஸ்பரம் பயனளிக்கும் மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு உறுதிபூண்டுள்ளோம். நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பிற்காகவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்."
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096839
***
TS/BR/RR
(रिलीज़ आईडी: 2096911)
आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada