பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
2025-26-ம் ஆண்டு பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
Posted On:
22 JAN 2025 3:09PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2025-26 சந்தைப் பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2025-26 பருவத்திற்கு கச்சா சணலுக்கான (டிடி-3 தரம்) குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.5,650/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சராசரி உற்பத்திச் செலவை விட 66.8 சதவீத வருவாயை உறுதி செய்யும். 2018-19 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அரசு அறிவித்தபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை, சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு என்ற அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் கொள்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.
2025-26 சந்தைப் பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முந்தைய சந்தைப் பருவமான 2024-25 ஐ விட குவிண்டாலுக்கு ரூ.315/- அதிகமாகும். 2014-15-ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2400/- ல் இருந்த கச்சா சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலையை 2025-26-ம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ. 5,650/- ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
2014-15 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் சணல் பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1300 கோடியாகவும், 2004-05 முதல் 2013-14 வரை ரூ.441 கோடியாகவும் இருந்தது.
40 லட்சம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சணல் தொழிலைச் சார்ந்துள்ளது. சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் சணல் ஆலைகளிலும், சணல் வர்த்தகத்திலும் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர். கடந்த ஆண்டு 1 லட்சத்து 70 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து சணல் கொள்முதல் செய்யப்பட்டது. 82% சணல் விவசாயிகள் மேற்கு வங்கத்தில் உள்ளனர்.
இந்திய சணல் கழகம் (JCI) விலை ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான மத்திய அரசின் அமைப்பாக உள்ளது.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2095235)
Visitor Counter : 20
Read this release in:
Marathi
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati