பிரதமர் அலுவலகம்
மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களைப் படையில் சேர்ப்பது, பாதுகாப்புத் துறையில் உலகத் தலைமையாகத் திகழும் நமது முயற்சிகளை வலுப்படுத்துவதுடன், தற்சார்பை நோக்கிய நமது தேடலையும் அதிகரிக்கும்: பிரதமர்
Posted On:
14 JAN 2025 8:29PM by PIB Chennai
2025 ஜனவரி 15 அன்று மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களைப் படையில் சேர்ப்பது என்பது பாதுகாப்புத் துறையில் உலகத் தலைமையாகத் திகழும் நமது முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், தற்சார்பை நோக்கிய நமது தேடலை அதிகரிக்கும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட பதிவிற்கு பிரதமர் பதிலளித்து கூறியுள்ளதாவது:
"நமது கடற்படை திறன்களைப் பொறுத்தவரை ஜனவரி 15, ஒரு சிறப்புமிக்க நாளாக இருக்கப் போகிறது. மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களைப் படையில் சேர்ப்பது, பாதுகாப்புத் துறையில் உலகத் தலைமையாகத் திகழ்வதற்கான நம் முயற்சிகளை வலுப்படுத்தும் மற்றும் தற்சார்பை நோக்கிய நமது தேடலை அதிகரிக்கும்.”
***************
TS/BR/KV
(Release ID: 2092984)
Visitor Counter : 13