தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் டிஜிட்டல் கண்காட்சி மகா கும்பமேளாவில் இன்று தொடங்கியது; முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்

Posted On: 13 JAN 2025 7:18PM by PIB Chennai

பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் உள்ள கண்காட்சி வளாகத்தில் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்களின் பங்கேற்புடன் கூடிய பொது நலன் சார்ந்த திட்டங்கள், கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசின் சாதனைகள், திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான டிஜிட்டல் கண்காட்சியை இன்று தொடங்கி  வைத்தது.

கண்காட்சியின் முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கானோர்  பார்வையிட்டனர்.

திரிவேணி சங்கமம் செல்லும் வழியில் உள்ள கண்காட்சி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சி இன்று தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை  நடைபெறுகிறது .பொதுமக்கள் இந்தக் கண்காட்சியை கட்டணமின்றி பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் கண்காட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களும் அனமார்பிக் சுவர், எல்இடி திரைகள், எல்இடி சுவர், ஹாலோகிராபிக் சிலிண்டர் மூலமான டிஜிட்டல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

கண்காட்சியின் சிறப்பம்சங்கள்:

பிரதமரின் மக்கள் சுகாதார இயக்கம்,  நமோ ட்ரோன் சகோதரி, லட்சாதிபதி சகோதரிகள், பிரதமரின்  வேலைவாய்ப்பு திட்டம், முத்ரா திட்டம், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், டிஜிட்டல் இந்தியா, பிரதமரின் வீட்டுவசதி திட்டம், வித்யாஞ்சலி, தற்சார்பு இந்தியா, திறன் இந்தியா, ஒரே பாரதம் உன்னத பாரதம், பிரதமரின் உஜ்வாலா திட்டம்,  குழாய்வழி குடிநீர் வழங்கல் திட்டம், பிரதமரின் திறன் மேம்பாட்டு இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம், பிரதமரின் தெருவோர வியாபாரிகளின் தற்சார்பு நிதித் திட்டம்,சுதந்திர இந்தியாவின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092584

-----

TS/SV/KPG/DL


(Release ID: 2092630) Visitor Counter : 25