பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 30 DEC 2024 2:13PM by PIB Chennai

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மறைவு தமக்கு ஆழ்ந்த மனவேதனையை அளிக்கிறது. சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதியான அவர், உலக அமைதி, நல்லிணக்கத்திற்காக அயராது பணியாற்றியவர். இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பு அளப்பரியது.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***

(Release ID: 2088834)
TS/SV/RR/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2088847) வருகையாளர் எண்ணிக்கை : 57