பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்பு 

Posted On: 21 DEC 2024 10:24PM by PIB Chennai

குவைத் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு. நரேந்திர மோடி குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிரம்மாண்டமான தொடக்க விழாவில் குவைத் பிரதமர் மேதகு அமீர், பட்டத்து இளவரசர் மற்றும் மேதகு குவைத் பிரதமர் ஆகியோருடன் அவர் இணைந்து கொண்டார். குவைத் தலைவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

குவைத், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டியை  நடத்துகிறது, ஜி.சி.சி நாடுகள், ஈராக், ஏமன் உட்பட எட்டு நாடுகள் இதில்  பங்கேற்கின்றன. இந்தக் கால்பந்து போட்டி பிராந்தியத்தின் மிக முக்கியமான விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். இதில் பங்கேற்ற நாடுகளிலேயே குவைத் அணி அதிக முறை கோப்பையை வென்றுள்ளது. இதில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

*************** 


BR/KV


(Release ID: 2086991) Visitor Counter : 9