பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் டி-க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 12 DEC 2024 7:35PM by PIB Chennai

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் டி -க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது சாதனை என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

சர்வதேச செஸ் சம்மேளனத்தின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

"வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் முன்மாதிரியானது !

குகேஷ் டி-யின் குறிப்பிடத்தக்க சாதனைக்கு வாழ்த்துகள். இது அவரது இணையற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதியின் விளைவாகும்.

அவரது வெற்றி செஸ் வரலாற்றில் அவரது பெயரைப் பொறித்தது மட்டுமின்றி லட்சக் கணக்கான இளம் மனங்கள் பெரிய கனவுகளைக் காணவும் சிறந்து விளங்கவும் ஊக்கமளித்துள்ளது.

அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள். @DGukesh"

***

SMB/DL


(Release ID: 2083939)