தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி வலைதளங்களை கண்காணிக்கும் தற்போதைய சட்டங்களை வலுப்படுத்த வேண்டியது மற்றும் சமுதாயத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம்: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர்
Posted On:
27 NOV 2024 1:50PM by PIB Chennai
மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய தகவல்&ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி வலைதளங்களை கண்காணிக்கும் தற்போதைய சட்டங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர், " சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி வலைதளங்கள் பெருகியுள்ள இக்காலத்தில் தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
வலைதளங்களின் புவிசார் அடையாளங்கள் மற்றும் நாட்டின் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் கலாச்சார வேறுபாடுகளை திரு வைஷ்ணவ் ஒப்புக் கொண்டார். தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை மேலும் கடுமையாக்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
***
(Release ID: 2077854)
TS/SV/RR/KR
(Release ID: 2077918)
Visitor Counter : 21