பிரதமர் அலுவலகம்
கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் செழித்து வருகிறது: பிரதமர்
சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளியை பார்வையிட்ட பிரதமர், இந்தியா-கயானா கலாச்சார இணைப்பை ஆழப்படுத்தும் முயற்சிகளில் சுவாமி ஆகாஷரானந்தா அவர்களின் பணிகளைப் பாராட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 NOV 2024 3:06AM by PIB Chennai
இந்தியா-கயானா கலாச்சார இணைப்பை ஆழப்படுத்தும் சுவாமி ஆகாஷரானந்தா அவர்களின் பணிகளைப் பாராட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்குச் சென்று, கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் செழித்து வளர்கிறது என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் செழித்து வளர்ந்து வருகிறது. கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்புகளை ஊக்குவிப்பதில் முன்னணியில் உள்ள அத்தகைய ஒரு இடமான சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் பள்ளியுடன் தொடர்புடைய அனைவரையும் நான் பாராட்டுகிறேன், இந்தியா-கயானா கலாச்சார இணைப்பை ஆழப்படுத்தும் முயற்சிகளில் சுவாமி ஆகாஷரானந்தா அவர்களின் பணிகளையும் பாராட்டுகிறேன்”.
***
(Release ID: 2075711)
TS/PKV/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2075928)
வருகையாளர் எண்ணிக்கை : 91
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam