பிரதமர் அலுவலகம்
ஆரிய சமாஜ் நினைவுச் சின்னத்திற்கு பிரதமர் அஞ்சலி
சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் இது மிகவும் சிறப்பான ஆண்டாகும்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
22 NOV 2024 3:09AM by PIB Chennai
கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள ஆர்ய சமாஜ் நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். கயானாவில் இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பதில் அவர்களின் முயற்சிகள் மற்றும் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்று திரு மோடி கூறினார். இந்த ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"கயானாவின் ஜார்ஜ்டவுனில், ஆரிய சமாஜ் நினைவுச்சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தினேன். கயானாவில் நமது கலாச்சாரத்தை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு உண்மையில் பாராட்டத்தக்கது. சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஆண்டாகும்”.
***
(Release ID: 2075712)
TS/PKV/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2075927)
வருகையாளர் எண்ணிக்கை : 108
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam