வ.எண்
|
கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம்
|
1.
|
ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
|
கச்சா எண்ணெய் கொள்முதல், இயற்கை எரிவாயுவில் ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஹைட்ரோகார்பன் மதிப்பு சங்கிலியில் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வது ஆகியவை இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அடங்கும்.
|
2.
|
வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
|
வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகளில் கூட்டு நடவடிக்கைகள், அறிவியல் பொருட்கள், தகவல்கள், பணியாளர்கள் பரிமாற்றம் மூலம் ஒத்துழைப்பை ஊக்குவித்தல்.
|
3.
|
கலாச்சார பரிமாற்ற திட்டம் (2024-27)
|
நாடகம், இசை, நுண்கலைகள், இலக்கியம், நூலகம், அருங்காட்சியக விவகாரங்கள் ஆகிய துறைகளில் கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உட்பட இந்தியா மற்றும் கயானா இடையே கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது
|
4.
|
இந்திய மருந்தியல் ஒழுங்கு முறையை அங்கீகரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
|
இந்திய மருந்தியல் ஆணையம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், கயானா சுகாதார அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். மருந்துகளை ஒழுங்குபடுத்தும் துறையில் நெருங்கிய ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்தல், மருந்துகளை ஒழுங்குபடுத்தும் துறையில் அந்தந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல்
|
5.
|
எச்எல்எல் லைஃப்கேர் நிறுவனம் மற்றும் கயானா சுகாதார அமைச்சகம் இடையே மக்கள் மருந்தகத்தை அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
|
பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ் கரிகாம் நாடுகளின் பொது கொள்முதல் முகமைகளுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்குதல்
|
6.
|
மருத்துவப் பொருட்கள் துறையில் ஒத்துழைப்புக்காக சி.டி.எஸ்.சி.ஓ மற்றும் கயானா சுகாதார அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
மருந்து பயன்பாட்டிற்கான மூலப்பொருட்கள், உயிரியல் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட மருந்துகள் தொடர்பாக மருத்துவ தயாரிப்புகள் ஒழுங்குமுறை உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
|
7.
|
டிஜிட்டல் மாற்றத்திற்காக மக்கள் தொகை அளவில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளை பகிர்ந்து கொள்ளும் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
திறன் வளர்ப்பு, பயிற்சித் திட்டங்கள், சிறந்த நடைமுறைகள் பரிமாற்றம், பொது அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பரிமாற்றம், முன்னோடி அல்லது செயல்விளக்க தீர்வுகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் மாற்றத்திற்கான துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல்
|
8.
|
என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் கயானா வெளியுறவு அமைச்சகம் இடையே, யுபிஐ போன்ற அமைப்பை கயானாவில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், கயானாவில் யுபிஐ முறையை நிகழ்நேர முறையில் செலுத்துவது போன்ற பயன்பாட்டை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை புரிந்துகொள்வதாகும்
|
9.
|
பிரசார் பாரதி மற்றும் கயானாவின் தேசிய தொலைத்தொடர்பு நெட்வொர்க் இடையே ஒளிபரப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
கலாச்சாரம், கல்வி, அறிவியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, செய்தி ஆகிய துறைகளில் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் தொடர்பான நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்ளுதல்
|
10.
|
கயானா தேசிய பாதுகாப்பு நிறுவனம், குஜராத் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
|
தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படிப்புகளில் ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி ஆகியவற்றை மேம்படுத்த இரு நிறுவனங்களுக்கும் இடையே கூட்டு கட்டமைப்பை உருவாக்குவதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
|