பிரதமர் அலுவலகம்
பிரதமர் அக்டோபர் 30-31 அன்று குஜராத்தில் பயணம்
தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்
ஏக்தா நகரில் ரூ.280 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
ஆரம்ப் 6.0-பயிற்சியின் 99-வது பொது அடிப்படைப் படிப்பு பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் உரையாற்றவுள்ளார்
Posted On:
29 OCT 2024 3:35PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 30, 31 ஆகிய இரு நாட்களில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 30 அன்று, அவர் கெவாடியாவில் உள்ள ஏக்தா நகருக்குச் செல்கிறார், மாலை 5:30 மணியளவில், ஏக்தா நகரில் ரூ.280 கோடிக்கும் மேலான மதிப்புடைய பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 6 மணியளவில், ஆரம்ப் 6.0-இன் 99-வது பொது அடிப்படைப் படிப்பு பயிற்சி அதிகாரிகளிடையே அவர் உரையாற்றுகிறார். அக்டோபர் 31 அன்று, காலை 7:15 மணியளவில், ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மலரஞ்சலி செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஏக்தா நகரில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துதல், அணுகலை மேம்படுத்துதல் மற்றும் இப்பகுதியில் நிலைத்தன்மை முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஆரம்ப் 6.0-இன் 99-வது பொது அடிப்படைப் படிப்பு பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் உரையாற்றவுள்ளார். இந்த ஆண்டு நிகழ்ச்சியின் கருப்பொருள் "தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரத்துக்கான திட்டம்" என்பதாகும். 99-வது பொது அடிப்படைப் படிப்பான ஆரம்ப் 6.0-ல் இந்தியாவின் 16 குடிமைப் பணிகள் மற்றும் பூடானின் 3 குடிமைப்பணிகளில் இருந்து 653 பயிற்சி அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
அக்டோபர் 31 அன்று, தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பிரதமர், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார். ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்கவைத்து, ஒற்றுமை தின அணிவகுப்பை பிரதமர் ஏற்கிறார். இதில் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேச காவல்துறை, 4 மத்திய ஆயுத காவல்படைகள், தேசிய மாணவர் படை மற்றும் அணிவகுப்பு இசைக்குழு ஆகியவற்றைச் சேர்ந்த 16 அணிவகுப்புக் குழுக்கள் இடம்பெறும்.
***
(Release ID: 2069191)
TS/IR/AG/KR
(Release ID: 2069220)
Visitor Counter : 28
Read this release in:
Odia
,
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam