தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 4

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: திரையிடப்படும் படங்களின் பட்டியலை இந்தியன் பனோரமா அறிவித்துள்ளது

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப். எஃப்.ஐ) முதன்மைப் பிரிவான இந்தியன் பனோரமா, ஐ.எஃப். எஃப்.ஐ-இன் 55-வது பதிப்பில் திரையிடப்பட உள்ள 25 திரைப்படங்கள் மற்றும் 20 கதையம்சம் அல்லாத திரைப்படங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. 55-வது இந்திய சர்வதேச விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட, 384 சமகால இந்திய திரைப்படங்களிலிருந்து 5 பிரதான பிரிவு திரைப்படங்கள் உட்பட 25 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தியன் பனோரமா 2024 இன் தொடக்கப் படமாக  திரு ரந்தீப் ஹூடா இயக்கிய “ஸ்வதந்த்ரியா வீர் சாவர்க்கர் (இந்தி)”-ஐ நடுவர் குழு தேர்வு செய்துள்ளது.

மேலும், 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட 262 சமகால இந்திய கதையம்சம் அல்லாத திரைப்படங்களில் இருந்து 20 திரைப்படங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. திரு ஹர்ஷ் சங்கனி இயக்கிய ‘கர் ஜெய்சா குச் (லடாக்கி)’, கதையம்சம் அல்லாத பிரிவுக்கான தொடக்கப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட திரைப்பட நடுவர் குழுவிற்கு புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டாக்டர். சந்திர பிரகாஷ் திவேதி தலைமை தாங்கினார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய தமிழ்த்திரைப்படமான “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”, இந்தப் பிரிவில் திரையிடப்படுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கதையம்சம் அல்லாத பிரிவின் நடுவர் குழுவிற்கு, புகழ்பெற்ற ஆவணப்படஇயக்குனரும், வி. சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது வென்றவருமான திரு. சுப்பையா நல்லமுத்து தலைமை வகித்தார். இயக்குநர் சிவா கிரிஷ்  இயக்கிய “அம்மா’ஸ் பிரைட்” மற்றும் இன்ஃபான்ட் இயக்கத்திலான “சிவந்த மண்” ஆகிய தமிழ்ப் படங்கள்  கதையம்சம் அல்லாத பிரிவில் திரையிடப்படும்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம்,கோவா மாநில அரசுடன் இணைந்து கோவாவின் பனாஜியில் 2024  நவம்பர் 20 முதல் 28 வரை 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்த உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067711

***

TS/BR/KR

iffi reel

(Release ID: 2068004) Visitor Counter : 68