ஜல்சக்தி அமைச்சகம்
6-வது தேசிய நீர் விருதுகள் 2024 குறித்து ஜல்சக்தி அமைச்சகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 2024, டிசம்பர் 31 கடைசி நாளாகும்
Posted On:
24 OCT 2024 12:27PM by PIB Chennai
6-வது தேசிய நீர் விருதுகள் 2024 குறித்த அறிவிப்பை நீர் வளங்கள், நதிகள் மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறையும் ஜல்சக்தி அமைச்சகமும் தேசிய விருதுகள் போர்ட்டலில் வெளியிட்டுள்ளன. அனைத்து விண்ணப்பங்களும் தேசிய விருதுகள் போர்ட்டல் (www.awards.gov.in) மூலமாக மட்டுமே பெறப்படும். கூடுதல் விவரங்களுக்கு பொதுமக்கள் இந்தப் போர்ட்டலை அல்லது துறையின் இணைய தளத்தை (www.jalshakti-dowr.gov.in) பார்வையிடலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 2024, டிசம்பர் 31 கடைசி நாளாகும்.
நீர் பாதுகாப்பு தொடர்பான நிர்வாகத்தில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு 9 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. மாநிலம், மாவட்டம் (வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு வடகிழக்கு என ஐந்து பிராந்தியங்களுக்கு தலா ஒன்று வீதம்) கிராமப் பஞ்சாயத்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பள்ளி/கல்லூரி, நிறுவனங்கள் (பள்ளி/கல்லூரி தவிர), தொழில்துறை, மக்கள் சமூகம், நீர் பயனர் சங்கம் ஆகியவை விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவை.
சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம் பிரிவில் வெற்றி பெறுவோருக்கு கோப்பையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். எஞ்சிய ஏழு பிரிவில் வெற்றி பெறுவோருக்கு கோப்பையும் பாராட்டுப் பத்திரமும் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த 7 பிரிவுகளில் முதல் பரிசு ரூ. 2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1.5 லட்சம், ரூ. 1 லட்சம் என வழங்கப்படும்.
முதலாவது தேசிய நீர் விருதுகள் 2018-ல் 14 வகைகளில் 82 வெற்றியாளர்களுக்கும் இரண்டாவது தேசிய நீர் விருதுகள் 2019-ல் 16 வகைகளில் 98 வெற்றியாளர்களுக்கும் மூன்றாவது தேசிய நீர் விருதுகள் 2020-ல் 11 வகைகளில் 57 வெற்றியாளர்களுக்கும் நான்காவது தேசிய நீர் விருதுகள் 2022-ல் 11 வகைகளில் 41 வெற்றியாளர்களுக்கும் ஐந்தாவது தேசிய நீர் விருதுகள் 2023-ல் 9 வகைகளில் 38 வெற்றியாளர்களுக்கும் வழங்கப்பட்டன. 2021-ல் கோவிட் காரணமாக தேசிய நீர் விருதுகள் வழங்கப்படவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பபைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2067603
***
TS/SMB/AG/KR
(Release ID: 2067745)
Visitor Counter : 55