உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சர்தார் படேலின் 150-வது பிறந்த நாளை, 2024 முதல் 2026 வரை இரண்டு ஆண்டுகள், நாடு தழுவிய அளவில் கொண்டாடுகிறது

Posted On: 23 OCT 2024 3:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சர்தார் படேலின் 150-வது பிறந்த நாளை 2024 முதல் 2026 வரை இரண்டு ஆண்டுகள் நாடு தழுவிய அளவில் கொண்டாடும் என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா அறிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ள அவர், "உலகின் மிகப்பெரும் குடியரசுகளில் ஒன்றை நிறுவுவதில்  தொலைநோக்கு பார்வை கொண்டவரான சர்தார் படேல் அவர்களின் நிரந்தரமான மரபும்,  காஷ்மீர் முதல் லட்சத்தீவு வரை இந்தியாவை ஒருங்கிணைத்த அவரது முக்கியமான பங்கும் அழியாது நிலைத்து இருக்கிறது.  அவரது மகத்தான பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு, அவரது 150-வது பிறந்த நாளை 2024 முதல் 2026 வரை இரண்டு ஆண்டு நாடு தழுவிய அளவிலான கொண்டாட்டத்துடன் நினைவுகூரும். இந்த கொண்டாட்டம் அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கும், அவர் உருவகப்படுத்திய ஒற்றுமை உணர்வுக்கும் ஒரு சான்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

----------

TS/IR/RS/KR/DL


(Release ID: 2067393) Visitor Counter : 42